கோவை : குனியமுத்தூர் அருகே லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண் தற்கொலை அஎய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் தந்தை மனு கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை : குனியமுத்தூர் அருகே லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் தந்தை மனு கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கும் போது தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் தந்தை கங்காதரனுடன், அவரது மகன் நிதுன் மற்றும் இந்து முன்னணி வழக்கறிஞர் ஶ்ரீதர் மூர்த்தி, இந்து முன்னணி நிர்வாகி குணா ஆகியோர் இருந்தனர். பின்னர், அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- ஶ்ரீ நாராயண குரு கல்லூரியில் பி. காம். முதலாம் ஆண்டு எனது மகள் அஸ்வினி கங்கா படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி லவ் ஜிகாத்தினால் தற்கொலை செய்து கொண்டார். அதே கல்லூரியில் பயின்று வந்த ஜாஃபர் என்ற இஸ்லாமிய மாணவர், எனது மகளை தொடர்ந்து மதமாற்றம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். நாங்கள் யாரும் இல்லாத போது, எங்களது வீட்டிற்கு வந்த அந்த மாணவன், அஸ்வினிக்கு தொந்தரவு கொடுத்து, அவரது படுக்கையறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார்.

மேலும், இது தொடர்பாக குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, காவல் ஆணையர் லவ் ஜிகாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் மீது உரிய நட்வடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினர். இதனிடையே, கோவையில் லவ் ஜிகாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆர்வம் காட்டவில்லை என்றும், இனி வரும் காலங்களில் இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அஸ்வினியின் தந்தை கங்காதரன் மற்றும் சகோதரர் நிதுன், ஜாஃபரை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது :- அஸ்வினியின் தந்தையுடன் இணைந்த இந்து அமைப்புகள் இதனை மத ரீதியிலான பிரச்சனையாக மாற்றுகின்றனர். விசாரணை முழு அளவில் நடந்து வருவதால், மாணவியின் தற்கொலைக்கான காரணம் விரைவில் தெரிய வரும், என்றனர்.